பயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்
பயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டபுரத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செந்தில், துணைத் தலைவர்கள் சிவா, தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார். கூட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக மொத்தம் ரூ.2,319 கோடி செலுத்தப்பட்ட நிலையில், காப்பீட்டு நிறுவனம் ரூ.560 கோடியை மட்டுமே இழப்பீடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் காப்பீட்டு நிறுவனம் பயிர்ச்சேதம் குறித்த கணக்கெடுப்பை வேளாண் துறை, வருவாய்த்துறை முன்னிலையில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்று தமிழக அரசே காப்பீட்டை ஏற்று நடத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னோடி விவசாயி மறையூர் சேகர், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன், இயற்கை விவசாயி ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.