அரியலூரில் இன்று கடன் வசதி முகாம்

அரியலூரில் கடன் வசதி முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-09-28 19:12 GMT

தமிழக அரசு சுய வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மக்களின் நலனுக்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்க முகாமை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கடன் வசதியாக்க முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

மாவட்ட கலெக்டர் மூலம் காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-2, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை எடுத்து வருமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்