நெல்லிதோப்பு மேம்பால தடுப்பு சுவரில் விரிசல்

நெல்லிதோப்பு மேம்பால தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-30 17:33 GMT

மீன்சுருட்டி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிசாலையாக விரிவுப்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கும்பகோணம், ராஜமன்னார்குடி, தஞ்சாவூர், சிதம்பரம் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலையாகும். இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் நெல்லிதோப்பு கிராமத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணியில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. இதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீது விழுந்து விடும் நிலையில் உள்ளதால் உடனடியாக விபத்து ஏற்படும் முன், இந்த கான்கிரீட் தடுப்புச் சுவரை உடனடியாக சரி செய்து, விபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்