கழிவுநீர் குட்டையில் சிக்கி உயிருக்கு ேபாராடிய பசு
அதிராம்பட்டினத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கி உயிருக்கு ேபாராடிய பசுவை அப்பகுதி வாலிபர்கள் மீட்டனர்.;
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கி உயிருக்கு ேபாராடிய பசுவை அப்பகுதி வாலிபர்கள் மீட்டனர்.
குட்டையில் சிக்கிய பசு
அதிராம்பட்டினத்தில் சுப்பிரமணியர் கோவில் தெரு உள்ளது. இங்கு வண்ணான்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளம் பல வருடங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கும் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கும் பயன்பட்டு வந்தது. நாளடைவில் இக்குளம் பராமரிப்பின்றி கழிவுநீர் குட்டையானது.நேற்று ஒரு பசு மாடு இந்த குட்டையில் சிக்கி உயிருக்கு போராடியது. இந்த குட்டையில் கழிவு நீர் இருப்பதால் இந்த பசுவை மீட்க பலரும் தயக்கம் காட்டிய நிலையில் இப்பகுதியில் உள்ள வாலிபா்கள் சிலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடும் சிரமத்துடன் போராடி கயிறு கட்டி கழிவுநீர் குட்டையில் இருந்து பசுவை மீட்டனர்.இளைஞர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.
குப்பைகளை அகற்ற கோரிக்கை
இந்த சாக்கடை குட்டையின் அருகில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள அங்கன்வாடி பள்ளி உள்ளது. இந்த அங்கன்வாடி பள்ளியில் உள்ள பச்சிளம் குழந்தைகளை காக்க இந்த குட்டையில் உள்ள கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.