மின்சாரம் பாய்ந்து மாடு சாவு

மின்சாரம் பாய்ந்து மாடு செத்தது;

Update: 2022-10-28 19:07 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நந்தையன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள மின்மாற்றி அருகே மாடு மேய்ந்தது. இந்நிலையில் அந்த மின்மாற்றியில் இணைப்பு கம்பி(ஸ்டே கம்பி) அறுந்த நிலையில் இருந்துள்ளது. அதில் சிக்கிய பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே செத்தது. இது குறித்து கிராம அலுவலர் மற்றும் குவாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்