புதன்சந்தையில் மாடுகள் விலை குறைந்தது
புதன்சந்தையில் மாடுகள் விலை குறைந்தது;
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாட்டு சந்தை கூடியது. கேரள மாநிலத்தில் தற்போது மீன்களின் வரத்து அதிகரித்ததாலும், மீன் விலை குறைந்ததாலும் மாட்டு இறைச்சி நுகர்வோர் எண்ணிக்கையும் மிகவும் குறைவானது. இதனால் கடந்த வாரம் ரூ.18 ஆயிரத்திற்கு விற்ற பசு மாடு ரூ.17 ஆயிரத்திற்கும், ரூ.23 ஆயிரத்திற்கு விற்ற எருமை மாடு ரூ.22 ஆயிரத்திற்கும், ரூ.9 ஆயிரத்துக்கு விற்ற கன்றுகள் ரூ.500 குறைந்து ரூ.8 ஆயிரத்து 500-க்கும் விலை குறைந்து விற்பனையானது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.