பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டு எச்சரிக்கை.!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளதாக வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2022-08-17 21:06 IST

சென்னை,

அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளதாக வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மானாமதுரை பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதாகவும் இந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பொதுநல வழக்கு என்ற பெயரில் கோர்ட்டுக்கு தவறான தகவல்களைத் தந்தால், அதிகபட்ச அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்படும் என்று கோர்ட்டு எச்சரித்துள்ளது.

மேலும் ஒரு பொதுநல வழக்கில் ஒரு உத்தரவுதான் பிறப்பிக்க முடியும் என்றும் மீண்டும் மீண்டும் வழக்குத் தொடர்ந்து கோர்ட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்