கந்துவட்டி கேட்டு மிரட்டிய தம்பதி கைது
மத்தூர் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;
மத்தூர்
மத்தூர் அருகே உள்ள கோடிபதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா. இவர்கள் அதே பகுதியை சேர்ந்த இளவரசனிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கினர். அதற்கு தொடர்ந்து வட்டி கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று இளவரசன் அவரது மனைவி சித்ரா ஆகியோர் கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக கிருஷ்ணன் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த இளவரசன், சித்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செயதனர்.