நாட்டு நலப்பணி திட்ட முகாம்

கடையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-09-29 19:14 GMT

கடையம்:

கடையம் அருகே வெங்காடம்பட்டி ஊராட்சி லட்சுமியூர் கிராமத்தில் முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி சங்கர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயராம் முன்னிலை வகித்தார். வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி சிறப்புரையாற்றினார். சுப்பிரமணியன் நன்றி கூறினார். லட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வருகிற 3-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்