நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
வாசுதேவநல்லூர் அருேக நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.;
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இணைந்து சிவகிரி தாலுகா தாருகாபுரம் கிராமத்தில் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெற்றது. பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் அ.வெளியப்பன் முகாமில் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கியத்துவம், மாணவர்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.
அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு டி.அசோக், அரசு சித்த மருத்துவர் ஆரோக்கிய ராஜ் , இசக்கிமுத்து, தீயணைப்பு குறித்த செயல் முறை விளக்கத்தினை வாசுதேவநல்லூர் நிலைய அலுவலர். மாடசாமிராஜா ஆகியோரும் பேசினர்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம், கிராம இல்லத்தரசிகளுக்கான கோலப்போட்டிகளும் நடைபெற்றன.
முகாமில் கல்லூரி சேர்மன் வெள்ளத்துரை பாண்டியன் தலைமையில், செயலாளர் சுந்தர், நிர்வாக இயக்குநர் வெள்ளத்தாய் கலந்து கொண்டனர்.
முகாமினை முதல்வர் ஈஸ்வரன், திட்ட அலுவலர் ஆவுடையம்மாள், உதவித்திட்ட அலுவலர் முத்துலட்சுமி மற்றும் பிற பணியாளர்கள் செய்திருந்தனர்.
கிராமத்தின் சார்பாக பஞ்சாயத்து தலைவர் கவிதா, கோவில் நிர்வாகி வெள்ளத்துரைப்பாண்டியன், அரசு சித்த மருத்துவர் ராணித்துரைச்சி, சுவாமி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்து துரைச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.