நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்

வெள்ளை கழிச்சல் நோயை கட்டுப்படுத்த நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.;

Update: 2023-03-14 18:45 GMT

காற்றின் ஈரப்பதம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவf;கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 4 கி.மீ., 6 கி.மீ., 4 கி.மீ.வேகத்தில் வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.

தடுப்பூசி

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது நிலவும் வானிலையில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நோயின் அறிகுறிகள், தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும். நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். மேலும் வெள்ளை கழிச்சல் நோய் நாட்டுக்கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன், மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திட பொருட்களின் அளவை நிலை நிறுத்த தீவனத்தில் சோடாஉப்பு கோடை காலம் முடியும் வரை கொடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் நாள் ஒன்றுக்கு 70 லிட்டருக்கு மேல் குடிநீர் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்