அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு கலந்தாய்வு

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு 2 நாட்கள் நடக்க உள்ளது.;

Update: 2023-06-20 19:48 GMT

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு 2 நாட்கள் நடக்க உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் இளமறிவியல் பட்ட வகுப்புக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை), 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி நாளை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை, புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 23-ந் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்