கள்ளக்குறிச்சியில் ரூ.10½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சியில் ரூ.10½ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற பருத்தி சந்தைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 350 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,309-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,910-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5,638-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,218-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்து 40 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானதாக கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் கூறியுள்ளார்.