செழித்து வளர்ந்துள்ள பருத்தி செடிகள்
பருத்தி செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.;
கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பருத்தி சாகுபடி செய்ய பிப்ரவரி, மார்ச் மாதங்கள் ஏற்றதாகும். எம்.சி.யூ-5 (விடி), எஸ்.வி.பி.ஆர்-2, 4, சுரபி ஆகிய ரகங்கள் ஏற்றவை. பஞ்சு நீக்காத விதையை ஏக்கருக்கு 6 கிலோ, பஞ்சு நீக்கிய விதையை ஏக்கருக்கு 3 கிலோ பயன்படுத்தலாம். பஞ்சு நீக்காத விதைகளை அமில விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அவ்வாறு விதைக்கப்பட்ட பருத்தி செடிகள் தற்போது நன்றாக வளர்ந்து அதிக மகசூல் தரும் தருவாயில் உள்ளன. அதன்படி கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது பருத்தி செடிகள் நன்று வளர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிக மகசூலை தந்து அதிக லாபத்தை தரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.