ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
கீழமணக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் அருகே கீழமணக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தஞ்சாவூர் வேளாண்மை விற்பனைக்குழு சார்பில் நடப்பாண்டுக்கான பருத்தி ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் பிரியமாலினி, மேற்பார்வையாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பருத்தி ஏலத்தில் திருப்பனந்தாளை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 127 லாட் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். 122 குவிண்டால் பருத்தியை கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.7.80 லட்சமாகும். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,719-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,829-க்கும், சராசரியாக ரூ6,429-க்கும் என கொள்முதல் செய்யப்பட்டது.