அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்;
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 966 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக ரூ.6,279-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.6,999-க்கும் ஏலம் போனது. மொத்தம் 18 லட்சத்து 18 ஆயிரத்து 409 ரூபாய்க்கு விற்பனையானது.
எள் 6 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக ரூ.15 ஆயிரத்து 129-க்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 669-க்கும் ஏலம் போனது. மொத்தம் 78 ஆயிரத்து 518 ரூபாய்க்கு எள் விற்பனையானது.
ஈரோடு, திருப்பூர், கோவை, சத்தி, பெருந்துறை பகுதி வியாபாரிகள் பருத்தியையும், எள்ளையும் வாங்கிச்சென்றனர்.