கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம் போனது;
எடப்பாடி
கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 500 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில் பி.டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.6,200 முதல் ரூ.7,400 வரை விற்பனையானது. மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த எள் ஏலத்தில் வெள்ளை ரகம் கிலோ ரூ.137 முதல் ரூ.145 வரை விற்பனையானது. சிவப்பு ரக எள் கிலோ ரூ.130 முதல் ரூ.143.50 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு எள் ஏலம் போனது.