குடிசை வீட்டில் தீ

செய்யாறு அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்தது.;

Update:2022-10-27 18:56 IST

செய்யாறு

வெம்பாக்கம் தாலுகா மோரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 54), இவரது மனைவி வாழையம்மாள்.

இவர்களுக்கு அம்பிகா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்களது குடிசை வீட்டில் படுத்து தூங்கினர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் இவர்களது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது, இதை பார்த்து அதிர்ச்சிடைந்த ராமமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து செய்யாறு தீயணைப்புக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாம்பல் ஆனது.

இந்த தீ விபத்து குறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது பட்டாசு வெடித்தால் தீப்பிடித்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்