74 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

74 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.;

Update: 2022-07-10 22:08 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நேற்று 31-வது சுற்றாக நடைபெற்றது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறையினரின் பங்களிப்போடு 3,640 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்பட ஊரக பகுதிகளில் 2,440 இடங்களிலும், திருச்சி மாநகரில் 1,200 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திச்சென்றனர். மேலும் 12-14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட முகாமில் 23 பேர் தடுப்பூசி செலுத்தி சென்றனர்.

நேற்று நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 74,039 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் 23,220 பேர் முதல் தவணையும், 41,912 பேர் 2-வது தவணையும், 8,907 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துக்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா நோயின் தொற்று பற்றிய விழிப்புணர்வும், கொரோனா தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதாரத் துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களில் நேற்று அதிக அளவு பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சிறப்பான நிலையினை எட்டியதற்கு சுகாதார துறையினர் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து துறை பணியாளர்களுக்கும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்