கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி; மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-28 16:17 GMT

மதுரை,

சீனாவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சீனாவில் இருந்து மதுரை வந்த 2 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், கூடுதல் பாதுகாப்பிற்காக 3-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்