நெல்லையில் 46 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தம் 236 பேர் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் நேற்று 18 பேர் குணமடைந்து உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் 68 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.