அமராவதி ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகளை கண்காணிப்பு குழு அமைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-02-16 16:15 GMT

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகளை கண்காணிப்பு குழு அமைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகரில் அமைந்துள்ளது. அமராவதி அணையில் இருந்து விவசாயத்திற்கு அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அத்துடன் கால்நடைகளின் தாகத்தையும் அமராவதி ஆறு தீர்த்து வருகிறது. பலரும் இந்த ஆற்றில் குளித்து வருவதால் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டில் அமராவதி ஆறு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

முதலைக்குஞ்சுகள்

மழைக்காலங்களில் அமராவதி அணை நிரம்பி அதிகப்படியான தண்ணீர் அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் காலங்களில் முதலைக்குஞ்சுகள் அமராவதி ஆற்றுக்கு வந்து சேருகின்றன.

இவ்வாறு வரும் முதலைக்குஞ்சுகள் ஆற்றின் கரையோர புதர்களில் ஒதுங்குகின்றன. இவ்வாறு வரும் முதலைகுஞ்சுகள் ஆற்றில் உள்ள மீன்கள், நாரை, கொக்கு, நண்டு, விலாங்கு மீன், தவளை, தண்ணீர் பாம்பு ஆகியவற்றை சாப்பிட்டு வளர்ந்து வருகின்றன.

கண்காணிப்பு குழு

தற்போது அலங்கியம் அமராவதி ஆற்றில் பாலத்தையொட்டிய பகுதியில் ஒரு முதலையும், சீதக்காடு பகுதியில் மற்றொரு முதலையும் அடிக்கடி பொதுமக்களின் கண்களில் தென்படுகிறது.. இது சில நேரங்களில் பாறைகளின் மீது ஏறி ஓய்வெடுப்பதை பலரும் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் அமராவதி அணையில் இருந்து வெள்ளத்தில் தப்பி வந்த 2 முதலைகள் இப்பகுதியில் உலாவி வருகின்றன. பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு குழு அமைத்து முதலைகளை பிடிக்க வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்