தாமிர கம்பி திருடியவர் கைது
தாமிர கம்பி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
பேட்டை:
பேட்டை போலீசார் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஐ.டி.ஐ. அருகே சந்தேகப் படும்படியாக மர்மநபர் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்றாா். அவரை பிடித்து விசாரணை செய்ததில் சாக்கு மூட்டையில் தாமிர கம்பியை திருடி சென்று தெரியவந்தது. விசாரணையில் அவர் உடன்குடி விநாயகர் காலனியை சேர்ந்த குமார் (வயது 42) என்பதும், மெட்டல் கடையில் தாமிர கம்பியை திருடிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், குமாரை கைது செய்தனர்.