திருச்செங்கோட்டில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.;
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.10,506 முதல் ரூ.11,699 வரையும், சுரபி ரக பருத்தி ரூ.10,419 முதல் ரூ.11,691 வரையும் விலை போனது. மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. இதேபோல் எள் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது.