நெல்லை, தென்காசி மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் தேர்வு

நெல்லை, தென்காசி மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளராக தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் டி.மோனிகா டிசோசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-09-29 15:32 GMT

நடப்பு ஆண்டான 2022-2023-ம் கல்வியாண்டில் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள சுமார் 48 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளராக தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் டி.மோனிகா டிசோசா, சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலகம் மூலமாக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பணிகளும் சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதல் முறைகளை முற்றிலும் சரியாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பள்ளிகளின் நிர்வாக குழுக்களில் கருத்துக்களை சி.பி.எஸ்.இ. தலைமை மண்டல அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவதும், இதன் திட்டங்களை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதும் ஒருங்கிணைப்பாளரின் இன்றியமையாத பணிகளில் ஒன்றாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளரை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்