போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒருங்கிணைப்புகுழு கூட்டம்
நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காவல்துறை மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி வடிவேல் தலைமை தாங்கினார். இதில் காவல்துறை மற்றும் நீதித்துறை இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது குறித்தும், குற்ற வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி செல்வராஜ், கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன், குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள் விஸ்வநாதன், நந்தினி, ரெகானா பேகம், சுரேஷ்பாபு, மாலதி, விஜயகார்த்திக் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.