சமையல்காரர் கொலை: 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கரூரில் சமையல்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-04-13 19:15 GMT

சமையல்காரர் கொலை

கரூரில் மக்கள் பாதையை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). சமையல்காரர். இவரது வீட்டின் முன்பு கடந்த 15.02.2023 அன்று இரவு மர்மநபர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை சரவணன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கத்தியால் சரவணனை குத்தி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கரூர் சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த பென்சில் என்கிற தமிழழகன் (28), கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் என்கிற சஞ்சய்குமார் (21) ஆகியோரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர், பென்சில் என்கிற தமிழழகன், சஞ்சய் என்கிற சஞ்சய்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சி சிறையில் உள்ள பென்சில் என்கிற தமிழழகன், சஞ்சய் என்கிற சஞ்சய்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து அதற்கான ஆணையை திருச்சி சிறையில் உள்ள 2 பேரிடம் கரூர் டவுன் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்