சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது;
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் , இ்ன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்து வழங்குவதில் உள்ள குறைகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் (ஏஜெண்டுகளின்) செயல்பாடுகள் தொடர்பாகவும், கியாஸ் சிலிண்டர்கள் நுகர்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் குறித்தும் ஆலோசனைகளை எரிவாயு நுகர்வோர் நேரில் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.