பணகுடி:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023-ம் ஆண்டுக்கான யூ.கே.ஜி. மாணவர்கள் தங்களது மழலையர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை பாராட்டும் விதமாக அவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகி டாக்டர் பொன்லட்சுமி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். பள்ளியின் கல்வி நிர்வாகி டாக்டர் சுந்தர்ராஜ் மாணவ-மாணவிகளுக்கு பட்டத்தை வழங்கினார். விழாவில் மாணவ-மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. மழலையர் வகுப்பு ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார்.