காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு கோவிலூர் ஆதீனம் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி 338 மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேரூரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மாணவர்கள் கணினி திறன், தகவல் தொடர்பு திறன், தலைமை பண்புகள், கூடி பணி செய்யும் திறன் மற்றும் பிறரோடு சரி செய்து கொள்ளும் திறன் ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன் வாழ்த்துரை வழங்கினார்.