ரெயில் மோதி காண்டிராக்டர் சாவு

நெல்லை அருகே ரெயில் மோதி காண்டிராக்டர் இறந்தார்.;

Update: 2022-07-10 20:16 GMT

நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலக்கருங்குளம் பெரியார்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஆறுமுகம் காண்டிராக்ட் எடுத்து வீடுகள் கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மேலக்கருங்குளம் அருகே உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக நாகர்கோவிலுக்கு சென்ற ரெயில் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் குமார் ராஜ் தலைமையிலான போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆறுமுகம் உடல் கிடந்த தண்டவாளத்தில் ஒரு டிபன் பாக்சில் இட்லி, வடை உள்ளிட்டவையும் இருந்தது. இதனால் தண்டவாளத்தில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்