ஒப்பந்த செவிலியர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்;

Update: 2023-01-10 18:45 GMT

விழுப்புரம்

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கடந்த 2 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றிய நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு பிறப்பித்த அந்த பணிநீக்க அரசாணையை மறுபரிசீலனை செய்து மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் 10-வது நாளாக நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒப்பந்த செவிலியர்கள், தங்களை அரசு கண்டுகொள்ளாததை கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை செவிலியர்கள், கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். செயலாளர் சத்யா, துணை செயலாளர் மகாலட்சுமி, பொருளாளர்கள் சுபஸ்ரீ, அழகி உள்பட பலர் கலந்துகொண்டு தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்