தொடர் மழை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-08 02:47 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் எனவும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்