ஆறுமுகநேரியில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம்
ஆறுமுகநேரியில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடந்தது.;
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் நுகர்வோர் பேரவை சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடந்தது. நுகர்வோர் பேரவை திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் பழனிவேல் நாடார் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி நகர அமைப்பாளர் மனோகரன், திருச்செந்தூர் நகர தலைவர் ராஜ மாதங்கண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி விரிவாக பேசினார். முன்னதாக தமிழ்நாடு நுகர்வோர் பேரவையினர் முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.