நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-22 18:45 GMT

விருதுநகர் அருகே வி.குமார் லிங்காபுரத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் வெங்கட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் அழகுசுந்தரம், செயலாளர் வீரணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் வேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வாங்கும் சக்தி கொண்ட அனைவரும் நுகர்வோர் எனவும், நுகர்வோருக்கு கல்வி அறிவு அவசியம் என்றும் குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளை பள்ளிகளுக்கு இடைநிற்றல் இல்லாமல் அனுப்ப வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முகவரி திருத்தம், பிறந்த தேதி ஆகியவற்றிற்கு தாலுகா அலுவலகத்திற்கு நேரில் மனு கொடுக்க வேண்டும். ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை ஆகியவற்றிற்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முகாமில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்