வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-13 15:54 GMT

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான கருத்துகளை தெரிவித்தனர்.

இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார்கள் வைரமுத்து, மல்லிகா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் செல்வம், முருகராஜ், சிவக்குமார், மோகன்பாபு மற்றும் அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்குச்சாவடிகள்

பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும், வால்பாறை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த நிலையில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சியினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

அப்போது டி.கோட்டாம்பட்டி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாகம் எண் 205-ல் 1400 வாக்காளர்கள் உள்ளனர். அதில் இருந்து வாக்காளர்களை பிரித்து பாகம் எண் 207-ல் சேர்க்க வேண்டும்.

ராமநாதபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.

ஆதார் எண் இணைப்பு

எனவே தற்காலிகமாக அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த வாக்குச்சாவடியை அமைக்க வேண்டும். மேலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவுறுத்தபட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்