அரசியல் கட்சியினர்களுக்கான ஆலோசனை கூட்டம்
அரகண்டநல்லூரில் அரசியல் கட்சியினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் டிஜிட்டர் பேனர் வைப்பது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் அரசியல் கட்சியினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் லியோசார்லஸ் வரவேற்றார். இதில் கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் கலந்து கொண்டுபேசினார். கூட்டத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க அரசு மற்றும் நீதிமன்றம் விதித்துள்ள விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் நன்றி கூறினார்.