நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.

Update: 2022-09-20 11:58 GMT

திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மாவட்டங்கள் அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்பு செயலாளர் ஹர்சஹாய்மீனா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறா என்று ஆலோசிக்கப்பட்டது.

மேலும் அனைத்து இடங்களிலும் அனைத்து வகையிலான ஏழ்மையை ஒழித்தல், பட்டினியை ஒழித்தல், உணவு பாதுகாப்பையும், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் அடைதல், நிலையான வளங்குன்றா வேளாண்மையை மேம்படுத்துதல்,

அனைவருக்கும் அனைத்து வயதிலும் ஆரோக்கிமான வாழ்வை உறுதி செய்தல், தரமான கல்வியை உறுதி செய்தல், அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்க பெறுவதை உறுதி செய்தல் போன்ற இலக்குகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

விழிப்புணர்வு

கூட்டத்தில் அரசு சிறப்பு செயலாளர் பேசுகையில், துறை அலுவலர்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டு அரசு திட்டங்கள் மக்கள் பயன் பெறும் வகையில் திட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பணிகளை சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர்கள் முருகேஷ் (திருவண்ணாமலை), அமர்குஷ்வாஹா (திருப்பத்தூர்), ஷ்ரவன்குமார் ஜடாவத் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஆலோசகர் சுஜாதா மற்றும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட திட்டக்குழு அலுவலர் நா.அறவாழி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்