'ஜல் சக்தி அபியான்' திட்டம் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறையில் 'ஜல் சக்தி அபியான்' திட்டம் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.;

Update: 2022-11-17 18:45 GMT

மயிலாடுதுறையில் 'ஜல் சக்தி அபியான்' திட்டம் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜல் சக்தி அபியான் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.இதில் மத்திய பொறுப்பு அலுவலர் இந்திய ஜவுளி துறை அமைச்சக துணை செயலாளர் ஆர்.எஸ்.சுக்லா, மத்திய ஆய்வு குழு தொழில்நுட்ப அலுவலர் சவுஸ்ரீ பாபு பாலாசாஹேப் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

நிலத்தடி நீர்

'ஜல் சக்தி அபியான்' என்னும் மழை நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கம் வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனைத்து துறைகளின் மூலம் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை மேம்பாடு செய்திட அமைக்கப்பட்ட கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.இதில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சிகுழிகள், மழைநீர் மீள் நிரப்புக் குழிகள், குளங்கள், தூர்வாருதல், பண்ணை குட்டைகள், வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளை துறை வாரியாக கலெக்டர் லலிதா மத்திய ஆய்வுக்குழுவிற்கு விளக்கி கூறினார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள். வேளாண்பொறியியல் துறை அலுவலர்கள், நகராட்சி மற்றும் பேருராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பின்னர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் இதர திட்டங்கள் தொடர்பாக குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 12 ஊராட்சிகளில் கள ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், உதவி செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன் மற்றும் சீத்தாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்