விநாயகர் சிலைகள் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலைகள் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2022-08-18 18:47 GMT

நொய்யல், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு, செப்டம்பர் 2-ந்தேதி மாலை சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர். இந்நிலையில் விநாயகர் சிலை வைத்தல் மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தகரத்தால் வேயப்பட்ட கொட்டகைக்கு அடியில் மட்டுமே விநாயகர் சிலை வைக்கப்பட வேண்டும். கூரைக் கொட்டைகளில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது.

இடையூறாக உள்ள இடத்தில் சிலையை வைக்கக் கூடாது.சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது காவல்துறை வழங்கி உள்ள அறிவுறுத்தல் படி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட வேண்டும். மசூதி, தேவாலயம் வழியாக செல்லும் போது பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்