விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

சின்னசேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-16 18:45 GMT

சின்னசேலம், 

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கினார். சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சின்னசேலம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். பாதுகாப்பான கொட்டகை அமைக்க வேண்டும். மேலும் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விழாவின் போது அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதில் விநாயகர் சிலை அமைப்புக்குழுவினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், தனிப்பிரிவு ஏட்டு கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்