மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்

மாநில கல்வி குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடக்கிறது.;

Update: 2022-11-02 18:02 GMT

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு காரணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள். பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம்.

மேலும் மாநிலக் கல்வி கொள்ளை தொடர்பான தங்களின் கருத்துகளை எழுத்து பூர்வமாக முழுமையான முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் காலை 10 மணி முதல் மாலை 5 ‌மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்