கல்குவாரிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
திருமயம் அருகே கல்குவாரிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கல்குவாரிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் திருமயம் அருகே லெம்பலகுடியில் சுய உதவி குழு கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கல்குவாரி இல்லை என்றால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்று கூறினர். அதேபோல் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இருதரப்பினரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன. இதில் தாசில்தார் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.