ஊதியம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

ஊதியம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-19 19:54 GMT

தாயில்பட்டி, 

பட்டாசு தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக தொழிலாளர்களிடையே கருத்து கேட்பு கூட்டம் எட்டக்காபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். புள்ளியல் துறை இயக்குனர் ஸ்ரீதர் வரவேற்றார். பட்டாசு தொழிலாளர்களிடம் பெரும் ஊதியம் குறித்து கேட்டறிந்தனர். வேலையின் தன்மையை பொறுத்து வாரச்சம்பளம், மாத சம்பளம், அதனை கொண்டு குடும்ப பொருளாதாரம், வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைக்கு போதுமானதாக இருக்குமா என தொழிலாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊதியத்தை உயர்த்தி வழங்கும் படி தொழிலாளிகள் கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சமுத்திரம், தேவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கண்ணன் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்