ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

அரக்கோணத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-28 18:09 GMT

அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ராணிபேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி தலைமை தாங்கினார்.

அப்போது அவர், ஊராட்சி ஒன்றியங்களில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள பணிகள் குறித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதில் உதவி செயற்பொறியாளர் அரிகிருஷ்ணன், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தர்ராஜ், வெங்கடேசன், நெமிலி சிவராமன், வேதமுத்து, சோளிங்கர் குமார், தனசேகரன், காவேரிப்பாக்கம் தண்டாயுதபாணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்