சாயல்குடியில் ஆலோசனை கூட்டம்
சாயல்குடியில் த.மு.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
சாயல்குடி,
சாயல்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. த.மு.மு.க., ம.ம.க. ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர் மற்றும் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி த.மு.மு.க. பேரூர் தலைவராக ஜாபர் அலி, செயலாளராக முபாரக், ம.ம.க. செயலாளராக அபுதாகிர், பொருளாளராக அப்துல் பாசித், துணை தலைவராக அசாருதீன், த.மு.மு.க. துணை செயலாளர்களாக நசீர் கான், ரியாஸ்கான், ம.ம.க. துணை செயலாளர்களாக சர்புதீன், சம்சுதீன், இளைஞர் அணி செயலாளராக சிக்கந்தர், மருத்துவ அணி செயலாளராக நெய்னார், மாணவரணி செயலாளராக செய்யது அகமது உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர், மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது முஹிதுல்லாஹ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, ம.ம.க. மாவட்ட செயலாளர் நஜீப் ரகுமான், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.