அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஜெயந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறுகையில், 'இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1-1-2023-ம் நாளை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்கப்பட்டது. மேலும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும், அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளரை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், உதவி கலெக்டர்கள் கங்கா தேவி (தென்காசி), சுப்புலட்சுமி (சங்கரன்கோவில்), தாசில்தார் ஆதிநாராயணன், தேர்தல் தனி தாசில்தார் கிருஷ்ணவேல், தென்காசி நகரசபை ஆணையாளர் பாரி ஜான், அரசியல் கட்சி பிரமுகர்கள் ராமராஜ் (தி.மு.க.), ராமச்சந்திரன் (அ.தி.மு.க.), சந்தோஷ் (காங்கிரஸ்), முருகன் (தேசிய வாத காங்கிரஸ்), ராமநாதன் (பா.ஜ.க.), மகேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்