அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு
குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 30-ந்ேததி ெதாடங்குகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கல்லூரியில் நடைபெற உள்ளது.
இக்கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பானை, மாணவர்கள் விண்ணப்பித்த பொழுது வழங்கிய அலைபேசி எண்ணின் வாட்ஸ்-அப்,
இணைய முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்படும். வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
மொழிப் பாடங்கள்
ஜூன் 3-ந் தேதி காலை10 மணிக்கு வணிகவியல் (பி.காம்), வணிக நிர்வாகவியல் (பி.பி.ஏ.), வணிகவியல் கணினி பயன்பாட்டியல் (பி.காம் சி.ஏ) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான
கலந்தாய்வு நடைபெற உள்ளது.ஜூன் 6-ந் தேதி காலை 10 மணிக்கு இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஜூன் 7-ந் தேதி காலை 10 மணிக்கு மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குசேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
ஆதார் அடையாள அட்டை
கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் உரிய நாட்களில் காலை 10 மணிக்கு இைணய வழி விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ் மற்றும் தங்களுடைய 2 புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 2 படிவம் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு வருகை தரவேண்டும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் https://dkgacklt.in/ என்ற கல்லூரி இணையதள முகவரியிலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.