கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
மதுரை மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் எல்லீஸ் நகர் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான வாரிய கூட்டத்தின் முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.மாவட்ட செயலாளர் லெனின் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலரிடம் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.