கட்டிட தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-08 19:00 GMT

திண்டுக்கல் அருகே நடுமாலைப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கு, திருமணமாகி மாசாணியம்மாள் (25) என்ற மனைவியும், சக்தி சபரி (9) என்ற மகனும் உள்ளனர். முருகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்